ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் சிறை வைக்கப்பட்டுள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றில் இந்திய மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ரொபர்ட பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் , 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருவதால், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்தநிலையில் இருவரையும் முன்கூட்டியே விடுவிக்க முடியாது எனவும் ஆயுள்தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறையில் இருக்கவேண்டும் எனவும் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அத்துடன் ராஜீவ்காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால், அந்த வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. எனவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.