பிலிப்பைன்சின் வடபகுதியில் உள்ள லூஸான் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
லூஸான் தீவின் வடகிழக்கே மணிலாவில் இருந்து சுமார் 73 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புட்டோல் பகுதியில் இன்று பிற்பகல் பூமியின் அடியில் சுமார் 168 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் மணிலாவிலும் உணரப்பட்டதனையடுத்து ஜனாதிபதி மாளிகை, உச்சநீதி மன்றத்தில் பணியாற்றும் அனைவரும் அவசரமாக வெளியேற நேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது