குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிபிசி வானொலி பேட்டியொன்றில் காலநிலை மாற்றம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
பிபிசி வானொலி பேட்டியொன்றில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சான்சிலர் நைஜல் லோவ்சன் கடந்த பத்து வருட காலப்பகுதியில் வெப்பநிலை சற்று குறைவடைந்துள்ளது என தெரிவித்த கருத்திற்கே விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் இது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல் என தெரிவித்துள்ளனர்.
வானொலிக்கு அளித்த பேட்டியில் லோவ்சன் இங்கிலாந்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் கடந்த 10 வருடங்களில் வெப்பநிலை குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்
பின்னர் இதே நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் காலநிலை அவதான நிலையத்தை சேர்ந்த அதிகாரி கலாநிதி பீட்டர் ஸ்டொட் முன்னாள் சான்சிலர் பிழையான தகவல்களை பெற்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
2016 ம் ஆண்டிலேயே அதிகளவான வெப்பநிலை காணப்பட்டது . 19 ம் நூற்றாண்டில் காணப்பட்டதை விட இது அதிகமாகும் ஆகவே வெப்பநிலை குறைவடைகின்றது என தெரிவிப்பது அர்த்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்
பல்கலைகழக பேராசிரியர் ரிச்சட் பெட்சும் வானிலை அவதான நிலைய அதிகாரியின் கருத்துக்களை ஆதரித்துள்ளார். உத்தேச புள்ளவிபரங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது அவை சர்வதேச அளவில் காலநிலை குறைந்துள்ளதை வெளிப்படுத்தவில்லை எனவும் மாறாக புள்ளிவிபரங்கள் அதற்கு மாறான நிலையே வெளிப்படுத்துகின்றன எனவும் 10 வருடங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.