குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கில் இடம்பெற்று வரும் அனைத்து விடயங்களுக்கும் புலி முத்திரை குத்துவது பொருத்தமற்றது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
சில தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச் செயல்கள் அனைத்தையும் புலிகளின் மீது சுமத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ள அவர் எல்லா சம்பவங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்துவதனை தாம் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆவா குழுவானது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல என சுட்டிக்காட்டியுள்ள அவர் 12000 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் ஏதேனும் தவறிழைத்தால், அதற்காக இந்த 12000 முன்னாள் போராளிகளும் நாளை ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என கருதுவது பிழையானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் படையினர் முகாம்களுக்கு முடக்கப்பட மாட்டார்கள் எனவும் வெளியே வந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1 comment
சட்டத்தையும் ஒழுங்கையும் பராமரிக்கும் நல்ல காவல்துறையை உருவாக்கி, செயல்பட வைத்து மக்கள் மத்தியில் உள்ள இராணுவ பிரசன்னத்தை முடிவுக்கு கொண்டுவர சம்பந்தர் முயற்சிகள் எடுப்பாரா?