குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உடனடியாக அணுவாயுத யுத்தம் இடம்பெறக்கூடிய சாத்தியமில்லை என அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவான சீ.ஐ.ஏவின் பணிப்பாளர் மைக் பொம்பே ( Mike Pompeo) இதனைத் தெரிவித்துள்ளார்.
வடகொரியா உடனடியாக அமெரிக்கா மீது அணுவாத யுத்தம் நடத்தக்கூடிய சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்கா தந்திரோபாய ரீதியில் அமைதி பேண வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
வடகொரியா அண்மைக்காலமாக மிக வேகமாக ஏவுகணை மற்றும் அணுத் திட்டப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும், மேலுமொரு ஏவுகணை பரிசோதனை விரைவில் நடத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் வடகொரியா தற்போதைக்கு அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவை தாக்கக்கூடிய ஏவுகணை தயாரிக்கும் முனைப்புக்களில் வடகொரியா முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.