விளையாட்டு

ஓய்வு பெற்றதன் பின்னர் மீளவும் திரும்பும் திட்டமில்லை – ஹூசெய்ன் போல்ட்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் மீளவும் போட்டிகளுக்கு திரும்பும் திட்டமில்லை என உலக நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் ஹூசெய்ன் போல்ட் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருடன் போல்ட் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார்.

இறுதியாக போல்ட் பங்கேற்ற நான்கு தர 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் எதிர்பாராதவிதமாக காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு உபாதையினால்  அவரினால் , போட்டி தூரத்தை கடக்க முடியவில்லை.

ரசிகர்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போல்ட்டின் பிரியாவிடை போட்டியில் அவரினால் ஜொலிக்க முடியவில்லை. ரசிகர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் பிரியாவிடை கொடுப்பதாக போல்ட் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் மீளவும் போட்டிகளில் பங்கேற்றவர்கள் அவமானங்களையே எதிர்நோக்கினார்கள் எனவும் தாம் அந்த பட்டியலில் இணைந்து கொள்ள விரும்பவில்லை எனவும் 30 வயதான போல்ட் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply