குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு பயணம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இவ்வாறு அமெரிக்காவிற்கு பயணம்; செய்ய உள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாடு ஆரம்பமாக உள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19ம் திகதி முதல் அமர்வுகளில் பங்கேற்க உள்ளார்.
ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மூன்றாவது தடவையாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின் போது பல்வேறு நாடுகளின் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது