155
A wounded restaurant customer sits on the ground following an attack by gunmen on a restaurant in Ouagadougou, Burkina Faso, in this still frame taken from video August 13, 2017. REUTERS/Reuters TV
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பர்கினா பாசோ என்ற நாட்டில் உள்ள உணவு விடுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 8 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயல் நாட்டினர் அதிக வந்து செல்லும் உணவு விடுதி ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இது ஆகும். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Spread the love