தாஜுதீனை கொலை செய்தமை தொடர்பில் முதலில் யோசித பின்னர் நாமல் தற்போது ஷிரந்தி என குற்றம் சுமத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கத்துக்கு எதிர்ப்பு வரும் போது அல்லது தேர்தல் வரும் போது தங்களது குடும்பத்தின் மீது ஏதாவது வீண் பழியை சுமத்துவார்கள் எனத் தெரிவித்த அவர் அந்த வகையில் தற்போது தாஜுதீன் களத்துக்கு வந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார். பொது ஜன பெரமுன கட்சியின் கண்டி சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டி கிளை அங்குரார்பண நிகழ்வில கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் தனது காலத்தில் பிரதம நீதியரசரை பாராளுமன்றத்தின் ஆணையுடன் மாற்றுனோம் எனவும் தற்போது நிலமை தலைகீழாக உள்ளது எனவும் தெரிவித்த அவர் வரலாற்றில் முதல் முறையாக ஆளும் கட்சி அமைச்சர் ஒருவருக்கு எதிராக ஆளும் கடசியே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருகிறது என அவர் தெரிவித்துள்ளார். தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என விஜேதாச கூறியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.