கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடர்ச்சியாக உயிரிழந்தமை தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரபிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பான அறிக்கையை நான்கு வாரத்தில் சமர்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையகம் உத்தரபிரதேச தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் நிவாரணத் திட்டங்கள் மற்றும் தவறு செய்த அதிகாரிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கை எடுத்திருக்கிறது? என்பது பற்றிய விவரங்கள் அந்த அறிக்கையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவமனை கட்டணநிலுவையினை செலுத்தாமையினால் ஒக்சிசன் விநியோகம் துண்டிக்கப்பட்டதனால் ஒக்சிசன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.