குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கின்றோம் என பிவிருத்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிக்க முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் குற்றச் செயல்களை பகிரங்கமாக விமர்சனம் செய்த காரணத்தினால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சட்ட மா அதிபரை நியமிக்கவோ அல்லது பதவி விலக்கவோ ஏனைய தரப்பினருக்கு அதிகாரமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.