குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படும் வர்த்தக உறவுகள் சரியானதே என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கம் அண்மையில் சீனாவுடன் செய்து கொள்ளப்படும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை சாதகமானதே எனவும், இதன் மூலம் உள்நாட்டு கைத்தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கைத்தொழில்களை கருத்திற் கொண்டே அரசாங்கம் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதாகத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் உள்நாட்டு கைத்தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியே சுதந்திர உடன்படிக்கை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.