அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இலங்கையின் மொழிக்கொள்கை, மும்மொழிக்கொள்கை என்பதனால் அனைத்து அரசாங்க அலுவலக படிவங்களிலும் மூன்று மொழிகளும் இடம்பெற வேண்டும்.
எனினும் இதுபற்றி தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கியும் மும்மொழிகளிலும் அனைத்து அரசாங்க அலுவலக படிவங்கள் அமைவதில்லை. குறிப்பாக தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படுவது இல்லை.
இந்தநிலையில் அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. எனவே இனிமேல் எவரும் மும்மொழி மொழிச்சட்டத்தினை மீற முடியாது என்பதுடன் எந்த ஒரு அதிகாரியும் மொழிச்சட்டம் தனக்கு தெரியாது எனக்கூறவும் முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று இலங்கை முழுவதிலும் உள்ள 882 அரச அலுவலகங்களிலிருந்து மூன்று மொழிகளிலும் இல்லாத முறையற்ற படிவங்களை பெற்று, அவற்றை மூன்று மொழி பெயர்க்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
மொழிபெயர்த்த பின்னர் புதிய மும்மொழி படிவங்கள் அமைச்சினால் அச்சடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அத்துடன் அந்த படிவங்களின் மென்பொருள் பதிவு செய்யப்பட்ட இறுவெட்டும் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 comment
‘அரசாங்க படிவங்களை மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இனிமேல் எவரும் மும்மொழிச்சட்டத்தினை மீற முடியாது என்பதுடன் எந்தவொரு அதிகாரியும் மொழிச்சட்டம் தனக்கு தெரியாதென்று கூற முடியாது’, என்ற செய்தி கேட்பதற்கு இனிப்பாகத்தான் இருக்கின்றது! ஆனால், இதே செய்தியைப் பல முறை முன்னரும் கேட்டுக் காதுகள் புளித்துப்போய்விட்டன! புதிதாக, இந்த முயற்சி மட்டும் எத்தனை நாட்களுக்கு?
மேலும், எந்த மொழியில் படிவம் இருந்தாலும்,’ ஆங்கிலத்தில் நிரப்பினால் மட்டுமே கருமம் ஆகும்’, என்ற நம்பிக்கையைச் சிறுபான்மைத் தமிழர் மனத்தில் இருந்து நீக்குவது அவ்வளவு சுலபமல்லவே? உண்மையும் அதுதானே?