Home உலகம்கிளிநொச்சியில் 38 ஏக்கர் காணியை இராணுவம் விடுவித்துள்ளது

கிளிநொச்சியில் 38 ஏக்கர் காணியை இராணுவம் விடுவித்துள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில்  இராணுவத்தினரின்  கட்டுப்பாட்டில் இருந்து வந்த 38 ஏக்கர் தனியார் காணிகள் இன்று செவ்வாய் கிழமை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 38 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்களை இன்று செவ்வாய் கிழமை இராணுவத்தினரால்  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனா்

கரைச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை இனம் காணப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர்  சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில்  கரைச்சி, பிரதேச செயலர் கோ. நாகேஸ்வரன் கண்டாவளை பிரதேச செயலாளர் த.முகுந்தன், உதவி மாவட்டச் செயலாளா் பிருந்தாகரன்  ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More