குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்தின்; வேலைவாய்பற்றவர்களில் ஐந்தில் ஓருவர் குடியேற்றவாசிகள் என்பது உத்தியோகபூர்வ புள்ளவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் 3லட்சத்து 17 ஆயிரம் குடியேற்றவாசிகள் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளதையும் இவர்களில் 98 ஆயிரம் பேர் ஐரோப்பிய ஓன்றிய நாடுகளில் பிறந்தவர்கள் என்பதையும் புதிய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
ஐரோப்பிய ஓன்றிய நாடுகளை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 4 வீதமானவர்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் காணப்படுகின்ற அதேவேளை ஏனைய நாடுகளை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 6.2 இதேநிலையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காக மக்கள் வாக்களித்த பின்னர் பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளை சேர்ந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் புதிய புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை ஐக்கிய இராச்சியத்தின் பிரஜைகள் அல்லாதவர்கள் தொழில்புரிவது மேலும் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இ;வ்வாறிருக்க இங்கிலாந்தில் வேலைவாய்ப்பின்மை வீதம் கடந்த மூன்று மாதங்களில் குறைவடைந்துள்ளதும் புள்ளவிபரங்கள் மூலம் புலனாகியுள்ளது. வேலைவாய்ப்பின்மை வீதம் தற்போது 4.4 வீதமாக காணப்படுகின்றது,