பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தடை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட கொள்கை தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லையெனவும் அந்த தீர்மானத்தை முறையாகவும், விரைவாகவும் அமுல்படுத்துவதற்கான பின்னணியை உருவாக்கும் பொறுப்பு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஒப்படைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று (16) மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அஸ்பெஸ்டஸ் மற்றும் புகையிலை தடைக்காக அரசாங்கம் செயற்படும் முறையிலேயே சுற்றாடலின் இருப்புக்கு கடுமையான சவாலான பொலித்தீன் தொடர்பிலும் தீர்மானத்துக்கு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்துக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்ற வகையில் அது தொடர்பில் மக்களது மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.