Home இலங்கைசிராந்தி ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தும் சகல உரிமையும் புலனாய்வுப் பிரிவிற்கு உண்டு

சிராந்தி ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தும் சகல உரிமையும் புலனாய்வுப் பிரிவிற்கு உண்டு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தும் சகல உரிமையும் புலனாய்வுப் பிரிவினருக்கு உண்டு என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வசீம் தாஜூடீன் சம்பவ தினமன்று தண்ணீர் போத்தல் ஒன்றை வாங்குவதற்காக வாகனத்தை நிறுத்திய போது, ஜீப் ஒன்று பின்தொடர்ந்துள்ளது எனவும் அந்த ஜீப் வண்டி சமூக சேவைகள் அமைச்சினால் சிரிலியே சவிய அமைப்பிற்கு வழங்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போதைய சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, இந்த வாகனத்தை சிரிலியே சவிய அமைப்பிற்கு வழங்கும் புகைப்படங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தாஜூடீன் கொலையுடன் இந்த வாகனம் காணாமல் போனதாகவும் பின்னர் ஹபரன பகுதியில் வாகனம் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More