குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய ஆற்றல் இருந்தும் டொக்டர் ராஜித சேனாரட்ன தீர்வு காணவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைச்சரே காரணம் என குறிப்பிட்டுள்ள திஸ்ஸ விதாரண எனவே அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.