குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனிய தலைவர்கள் எதிரிகள் என துருக்கியின் ஜனாதிபதி ரையிப் எர்டோகன் (Tayyip Erdogan ) தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் ஆளும் அரசியல்வாதிகள் துருக்கியின் எதிரிகள் என அவர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24ம் திகதி ஜெர்மனியில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜெர்மனியில் சுமார் ஒரு மில்லியன் துருக்கிய பிரஜைகள் ஜெர்மனியில் வாக்களிக்க தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு ஜெர்மனியில் வாழும் பெரும்பான்மையான துருக்கியர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதி ரையிப் எர்டோகனுக்கு ஆதரவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியின் தற்போதைய ஆளும் கட்சிக்கு துருக்கி மக்கள் ஆதரவளிக்கக் கூடாது என துருக்கி ஜனாதிபதி ரையிப் எர்டோகன் கோரியுள்ளார்.