பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்றமையினால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் வெள்ளத்தில் சிக்கி பீகாரில் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நேற்று மட்டும் ஒரே நாளில் 11 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 18 மாவட்டங்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும் 98 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், உத்தரப்பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மழையால் பாதிப்பு அடைந்தவர்கள மீடகப்பட்டுவருவதாகவும் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.