155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்பெய்னில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி இவ்வாறான தாக்குதல்களிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
Spread the love