குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரின் குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அனைத்து தரப்பினரதும் குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் வழித் தடங்களை பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர்களின் குடியுரிமையை பிரதமர் பண்டாரநாயக்க நீக்கியிருந்தார் என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகிய ஜனாதிபதிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.