அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் துணை முதலமைச்சர் பதவி ஓ.பன்னீர் செல்வத்துக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமரச உடன்படிக்கையின்படி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தெரிவித்துள்ளனர்.
அணிகள் இணைப்பில் 2 அணிகளுக்கும் இடையே தடையாக இருந்த பல அம்சங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேற்றையதினம் செய்தியாளர்களிடம் தங்ககளால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது எனவும் அணிகள் இணைப்புக்கு தாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது எனவும் இன்னும் ஓரிரு நாளில் இறுதி முடிவு எட்டப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதேபோல கே.பழனிசாமியும் இரு அணிகள் இடையேயான கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டு விட்டன எவும் இன்னும் ஓரிரு நாளில் 2 அணிகளும் இணையும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் நாளை அமாவாசை என்பதால், இணைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு தலைவர்களும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.