குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவது மிகவும் அவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஏறாவூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்தனர் என குறிப்பிட்டுள்ள அவர் கடும்போக்குவாதத்திற்கு இடமளிக்கப்படாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் பாரிய கடன் சுமையை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் கடந்த அரசாங்கத்தினால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வுத் திட்டங்களை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்