248
அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது. . புதிய அமைச்சர்கள் பிற்பகல் 3 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பதவி பிரமாணம் செய்து வைகப்பதற்காக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்துவிட்டு அவசரமாக இன்று சென்னை வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் மாபா. பாண்டியராஜன், செம்மலை ஆகியோருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love