இலங்கையில் காவல்துறையினர் தெற்கு மக்களிடம் ஒரு விதமாகவும் வடக்கு மக்களிடம் இன்னொரு விதமாகவும் நடந்து வருகின்றனர் எனவும் இதனால் இலங்கையில் தற்போது வாழ முடியாத ஒரு சூழ்நிலை காணப்படுவதாகவும் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டிருந்த ஒரு பிடியாணை உத்தரவின் பிரகாரம் தன்னைக் கைது செய்ய தனது வீட்டிற்கு வந்திருந்த காவல்துறையினர் தான் ஒரு தேர்தல்குழு ஆணையாளர் என்பது கறித்து அறிந்திருந்தும் தன்னை ஒரு குற்றவாளி போன்று நடத்தியிருந்ததாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த சம்பவமானது தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட முடியுமா என்ற கேள்வி விடுவதாகவும் தனது மனைவி பிள்ளைகள் இலங்கையில் பாதுகாப்பாக வாழ முடியுமா என்ற நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தன் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தல் குறிப்பிட்டுள்ளர்h.
கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியிருந்த பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு திரும்பியுள்ள நிலையில் அவர்மீது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து நீதிமன்றில் சரணடைந்த போராசிரியர் கூல் இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்த போதும் மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே காவல்துறையினர் அவரது வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபருக்கு காவல்துறை மாஅதிபர் பூஜித ஜெயசுந்தர விடுத்த அறிவிப்புக்கு ஏற்ப காவல்துறையினர் அPள அழைக்கப்பட்டதாகவும் போராசிரியர் கூல் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதிக்கு பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் எழுதிய கடிதத்தின் பிரதிகள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.