தமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சராக மாபா பாண்டியராஜனும் இன்று ஆளுனர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மாபா பாண்டியராஜனுக்கு தொல்லியல்துறை, தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கால்நடைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாலகிருஷ்ண ரெட்டிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.சி.சம்பத் வசம் இருந்த சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை சி.வி.சண்முகத்துக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இரு அணிகளினதும் இணைப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியதன் பின்னர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகள் இணைவு- . புதிய அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்பு
Aug 21, 2017 @ 10:19
அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள் இன்று தலைமை அலுவலகத்தில் ஒன்றிணைந்தன. அணிகள் இணைப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளன. அதன்படி, கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மாபா பாண்டியராஜனுக்கு தொல்லியல்துறை, தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கால்நடைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாலகிருஷ்ண ரெட்டிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் இன்று மாலை 4.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.