முத்தலாக் முறைக்கு 6 மாதங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அத்துடன் மத்திய அரசு 6 மாதத்தில் அவரச சட்ட திருத்தம் கொண்டு வந்து முத்தலாக் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இஸ்லாமியருக்கு பிரச்னை இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
6 மாதத்திற்கு சட்டம் இயற்றவில்லையென்றால் முத்தலாக் மீதான தடை நீடிக்கும் எனவும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை விட்டு மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், ஏன் சுதந்திர இந்திய நாட்டில் கொண்டு வர முடியாது என கேள்வி எழுப்பினர்.
முத்தலாக் வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.
Aug 22, 2017 @ 03:48
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முத்தலாக் வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்குகவுள்ளது.
முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்டப்படி செல்லுபடியானதா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே 11ம் திகதி முதல் 6 நாட்கள் நடைபெற்றது.
இதில் மனுதாரரான மனுதாரர் ஷாயரா பானு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முத்தலாக் விவாகரத்து நடைமுறை ஒரு பாவச்செயல்’ என்பதை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேவேளை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மிகவும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய, முத்தலாக் விவாகரத்து நடைமுறையை பயன்படுத்தக் கூடாது என முஸ்லிம் ஆண்களிடம் அறிவுரை வழங்கும்படி, அனைத்து காஸிக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தாhர்.
இந்தநிலையில் முத்தலாக் நடைமுறை சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால் முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறைக்கு புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர தயார் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பை வழங்க உள்ளது.