டெல்லியில் தமிழக விவசாயிகள் பிரதமர் மோடியை கவரும் வகையில் யோகா செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் தங்களின் குறைகளை கேட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்கள் என்று கூறி பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந் ஆகியோருக்கு மனு எழுதி வைத்துள்ளனர்.
காவிரி மேலாண் வாரியம் அமைத்தல், நதிகளை இணைத்தல், வங்கி கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் எங்களை சந்தித்து பேசி எங்களின் குறைகளை கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மனு எழுதி வைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.