153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தற்கொலைதாரி ஒருவர் இலங்கையர்களை மூளைச் சலவை செய்ய முயற்சித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. முகநூலைப் பயன்படுத்தி இவ்வாறு மூளைச் சலவை செய்ய முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவின் ரக்கா பகுதியில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்ட இந்திய தற்கொலை குண்டுதாரியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வாழ்வோரிடம் முகநூல் ஊடாக தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love