தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் வழங்கியுள்ளனர். எனினும் ஆளுநர் முதலமைச்சரை சட்டமன்ற உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து சபாநாயகர் தனபாலிடம் முதலமைச்சர்; எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுக்க தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
10 வீதமான சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்தால்தான் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை சபாநாயகரிடம் வழங்க முடியும். அதேவேளை தினகரன் தரப்பு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் நிலையில் அதை திமுகவும் ஆதரிக்கும் என்று கருதப்படுவதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழ்க்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.