Home இலங்கைபரீட்சை மோசடிகளில் ஈடுபடுவோருக்கு மன்னிப்பு கிடையாது – கல்வி அமைச்சர்

பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவோருக்கு மன்னிப்பு கிடையாது – கல்வி அமைச்சர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவோருக்கு மன்னிப்பு கிடையாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பரீட்சை மோசடிகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அவர்களின் தராதரம் பாராது தண்டனை விதிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரம் இரசாயனவியல் பரீட்சையின் இரண்டாம் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

பரீட்சைத் திணைக்களத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மாற்றம் செய்ய எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More