குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நவ்று தடுப்பு முகாமில் உள்ள மூன்று கர்ப்பிணிப்பெண்களையும் அவுஸ்திரேலியாவிற்கு உரிய சிகிச்சைகளிற்காக கொண்டுவரவேண்டும் என அவுஸ்திரேலியமருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
நவ்று முகாமில் அவசர மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய நிலையில் உள்ள கர்ப்பிணிகள் உட்பட பலர் அவுஸ்திரேலியாவிற்கு மருத்துவசிகிச்சைக்கு செல்வதை அதிகாரிகள் தடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது
இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவுஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் தலைவர் மைக்கல் கனொன் நவ்று முகாமில் உள்ள மூன்று கர்ப்பிணிகளின் விவகாரத்தில் எந்த வித குழப்பமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஓழுக்காற்று கொள்கைகளின் அடிப்படையிலும் எந்த பிரச்சினைகளும் இல்லை எனவும் அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோருபவர்களிற்கு அவுஸ்திரேலிய பிரஜைகளிற்கு வழங்கப்படும் சுகாதார வசதிகளை அதே தராதரத்துடன் பெறுவதற்கான உரிமை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பு என்பது மிகவும் சிக்கலானது எனவும் மேலும் அதற்கு நவ்று தீவில் சட்டரீதியான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் இதனால் அந்த நோயாளிகளை அவுஸ்திரேலியாவிற்கு மாற்றவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிகிச்சைகளிற்காக அவுஸ்திரேலியா செல்பவர்களை நவ்று மருத்துவமனை குழுவினர் தடுத்து வருவதாக குற்றச்சாட்டு
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
Aug 22, 2017 @ 12:42
சத்திரசிகிச்சைகள் கருக்கலைப்பு மற்றும் ஏனைய சிகிச்சைகளிற்காக நவ்று தடுப்பு முகாமில் உள்ளவர்கள் அவுஸ்திரேலியா செல்வதை நவ்று மருத்துவமனை குழுவினர் தடுத்து வருவதாக குற்;றச்சாட்டுகள் எழுந்துள்ளன
நவ்றுவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளிற்கு அவசர சிகிச்சைகளிற்காக அவுஸ்திரேலியா செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர் எனவும் இவர்களில் மூன்று பெண்களும் உள்ளனர் அவர்கள் கருக்கலைப்பு செய்யவேண்டிய நிலையில் உள்ளனர் எனவும் எனினும் அவர்களிற்கு அதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது எனவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன
மருத்துவர்களின் பரிந்துரைகளை புறக்கணித்து மருத்துவமனைமனை குழு நோயாளிகள் அவுஸ்திரேலியா செல்வதை தடுத்து வருகின்றது என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன
நவ்றுவில் உள்ள மூன்று கர்ப்பிணிப்பெண்கள் கலாச்சார குடும்ப மற்றும் உடலநல காரணங்களிற்காக கர்ப்பத்தை கலைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள மனித உரிமை அமைப்புகள் மருத்துவர்கள் அவர்களை அவுஸ்திரேலியாவிற்கு கொண்டுசெல்லவேண்டும் என பரிந்துரை செய்துள்ள போதிலும் அதனை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
நவ்றுவில் பெறமுடியாத சிகிச்சைகளை அவுஸ்திரேலியாவில் பெறுவதற்காக 50 ற்கும் மேற்பட்ட நவ்று அகதிகள் காத்திருப்பதை அவுஸ்திரேலிய எல்லைக்காவல் படையை சேர்ந்த அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
நவ்று தடுப்பு முகாமில் உள்ளவர்களை மருத்துவ பரிசோதனைக்காக அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வருவதென்றால் அதற்காக நவ்று மருத்துவமனையின் குழுவொன்றின் அனுமதி அவசியம் என அவுஸ்திரேலியாவின் குடிவரவு திணைக்களம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்தே இந்த நெருக்கடி நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது