154
கேப்பாபிளவில் இராணுவத்தினரிடம் உள்ள காணிகளை மீட்பதற்கு மீள் குடியேற்ற அமைச்சு நிதியினை வழங்க உள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் , ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் ,
கேப்பபிளவு காணி விடுவிப்பதற்காக இராணுவத்தினர் கோரிய நிதியினை கையளிக்க திறைசேரியில் இருந்து , நிதியினை பெற அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். அமைச்சரவை அதற்கு ஒப்பதல் அளித்த வுடன் அந்த நிதியினை இராணுவத்தினரிடம் கையளிப்போம்.
இராணுவத்தினர் கோரிய 178 மில்லியன் ரூபாய் நிதி திறைசேரியில் கோரியுள்ளோம். அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த நிதி மீள் குடியேற்ற அமைச்சுக்கு வழங்கப்படும். அமைச்சுக்கு கிடைத்தவுடன் அதனை நாம் இராணுவத்தினருக்கு கையளித்ததும். கேப்பாபிலவை இரானுவத்தினர் மீள் குடியேற்ற அமைச்சிடம் கையளிப்பார்கள். அதனை தொடர்ந்து அந்த காணிகளை நாம் மக்களிடம் கையளிப்போம் என மேலும் தெரிவித்தார்
Spread the love