Home இலங்கைஉரும்பிராய் சந்தியில் இன்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம்

உரும்பிராய் சந்தியில் இன்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உரும்பிராய் சந்தியில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உரும்பிராய் சந்தியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு சென்று இருந்த இளைஞர்கள் அங்கு தகாத வார்த்தை பிரயோகத்தினை மேற்கொண்டு வாக்குவாதப்பட்டுள்ளனர்.

அதனை அடுத்து சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர் , தொழில் செய்யும் இடத்தில் இவ்வாறான வார்த்தை பிரயோங்களை மேற்கொண்டு முரண்பட வேண்டாம் என கூறி இளைஞர்களை கடையில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளார்.

கடையில் இருந்து வெளியேறிய இளைஞர்கள் இரவு வாள்களுடன் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குள் புகுந்து உரிமையாளர் மீதும் அங்கிருந்த மற்றுமொரு இளைஞர் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த வாள் வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர்; விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை , நல்லூர் திருவிழா முடிய வாள் வெட்டுக்குழுக்களுக்கு திருவிழா இருக்கு என்றும் , தற்போது நல்லூர் திருவிழாவில் பெரும்பாலான காவல்துறையினர்; பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும்  திருவிழா முடிய வாள் வெட்டுக்குழுக்களை அடக்கிவிடுவோம் எனவும் யாழ்.மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More