176
வோசிங்டனில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் வளாகத்தில் சந்தேகத்திற்குரிய பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றதாக தெரிவிப்படுகின்றது.
வெள்ளை மாளிகையின் வடக்குப்பகுதியில் உள்ள சுவர் அருகே சந்தேகப்படும் வகையில் பொதி ஒன்று காணப்பட்டநிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளை மாளிகையை தற்காலிகமாக மூடி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள வீதிகள் மூடப்பட்டு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love