சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து, சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்ததையடுத்து அவர்கள் பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை வைப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி சசிகலா, தரப்பு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் எந்த பிழையும் கண்டறியவில்லை என தெரிவித்த நீதிபதிகள் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதனால் சசிகலா உள்ளிட்டோருக்கான நான்காண்டு தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.