குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவுடன் இராணுவ மோதலை தவிர்க்க முடியும் என ஜெர்மன் அதிபர் என்ஜலா மோர்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமைக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வு காண ஜெர்மன் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் ஜெர்மனியும், ஐரோப்பிய ஒன்றியமும் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ராஜதந்திர தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரிக் கொண்டு வெறுமனே வேடிக்கை பார்ப்பதில் எவ்வித பயனும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அதிபர் என்ஜலா மோர்கல எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.