குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சியின் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சருக்கு எதிராக சுமார் ஏழு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மதிப்பீட்டு பெறுமதியை விடவும் குறைந்த தொகைக்கு முகத்துவாரம் மீன்பிடித்துறை முகத்தை குத்தகைக்கு விடுதல், லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சமூகமளிக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ராஜிதவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம்:
Aug 24, 2017 @ 03:07
சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இன்றைய தினம் அல்லது நாளைய தினத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த யோசனை ஒப்படைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சருக்கு எதிராக சுமார் ஏழு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தேவையான கையொப்பங்கள் இன்றைய தினம் திரட்டப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.