குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெண்கள் ஆடைகளை அணிந்த சிங்கப்பூர் பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஆண் ஒருவரும், பால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவரும், பெண்கள் அணியும் ஆடைகளை அணிந்து சென்றதாகக் குற்றம் சுமத்தி தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றச் செயலுக்காக ஓராண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபியில் அமைந்துள்ள சொப்பிங் மோல் ஒன்றில் வைத்து இந்த இருவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் பெண்கள் ஆண்கள் ஆடைகளையும், ஆண்கள் பெண்கள் ஆடைகளையும் அணிவது சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு சிங்கப்பூர் பிரஜைகள் பொது இடத்தில் பெண்கள் ஆடைகளை அணிந்து கொண்டு அநாகரீகமாக நடந்து கொண்டதாக, இருவருக்கும் எதிரான குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.