150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்ட மா அதிபர் திணைக்களம் தவறிழைக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுடன் நேற்றைய தினம் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களம் சுயாதீனமாக இயங்குவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி சட்ட மா அதிபர் திணைக்களம் மீது எவரேனும் குற்றம் சுமத்தினால் அதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த ஊடக சந்திப்பு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love