பிரேசிலின் பஹியா மாநிலத்தில் உள்ள கடல்பகுதியில் 130 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
கப்பலானது நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும் போது கப்பல் திடீரென எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த விபத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்டவர்களை அந்நாட்டு கடற்படையினர் மீட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் மீட்புப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினமும் பிரேசிலின் வடக்குப் பகுதியில் உள்ள பார் மாநிலத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே வாரத்தில் இரண்டு படகு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதனால் அது குறித்த விசாரணைக்கு உத்திரவிட்டுள்ள அரசாங்கம் , 3 நாட்களை துக்கதினமாகவும் அறிவித்துள்ளது.