அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அரசாங்கம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெள்ளை மாளிகையின் ஆலோசகர் செபாஸ்டியன் கோர்கா (Sebastian Gorka) பதவிவிலகியுள்ளார். அமெரிக்காவின் தகவல் தொடர்பு துறையின் இயக்குநராக இருந்த மைக் டுப்க், கடந்த மே மாதம் பதவிவிலகியிருந்தார்.. அதைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு அதிகாரியாக இருந்த சீன் ஸ்பைசர் பதவிவிலகியிருந்தார்
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் ஆலோசகராக, கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட செபாஸ்டியன் கோர்கா நேற்று பதவிவிலகியுள்ளார். அவர், கடந்த ஏப்ரல் மாதமே பதவிவிலக முடிவெடுத்திருந்ததாகவும் எனினும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதை அடுத்து பதவிவிலகாது இருந்த அவர் நேற்றையதினம் பதவி விலகியுள்ளார்.