179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கனடாவில் நிதி திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கனடாவின் சில பகுதிகளுக்கு பயணம் செய்து வருகின்றார்.
இந்தநிலையில் மாவை சேனாதிராஜா தலைமையிலான பிரதிநிதிகள் கனடாவின் சில பகுதிகளில் நடைபெறவுள்ள மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதுடன், நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love