தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் சின்வத்ரா ( Yingluck Shinawatra ) டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார். யிங்லக் சின்வத்ராக்கு எதிரான ஊழல் மோசடி குற்றச்சாட்டு வழக்கு விசாரணைகளின் தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில் அவர் இவ்வாறு டுபாய்க்கு சென்றுள்ளார். கடந்த வாரத்தில் சின்வத்ரா இவ்வாறு டுபாய்க்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சின்வத்ராவின் சகோதரரும் தாய்லாந்தின் முன்னாள் பிரதமருமான தக்சின்சி ன்வத்ராவும் தற்போது டுபாயில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் தமக்கு எதிரான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு இவ்வாறு டுபாய்க்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் டுபாய்க்கு தப்பியோட்டம் தப்பிச் சென்றுள்ளார் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
150
Spread the love