குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இரண்டு ஆண்டுகள் சிறைக்குச் செல்லத் தயார் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவத்துள்ளார். நாட்டின் சட்டம் மற்றும் சுயாதீனத்தன்மை குறித்து நேர்மையாக கருத்துக்களை வெளியிட்டு அதற்காக இரண்டாண்டுகள் சிறைக்குச் செல்லத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றை அவமரியாதை செய்ததாக குற்றம் சுமத்தி பொதுபல சேன பிக்கு ஒருவரும் மற்றுமொரு நபரும் தமக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சட்டத்தரணிகள் சங்கமும் தமக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்த வழக்குகளை எதிர்நோக்கத் தயார் எனவும், தாம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான சாட்சியங்களை முன்வைக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள அனைத்து நீதிபதிகளும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக தாம் குற்றம் சுமத்தவில்லை எனவும், மண்டியிட்டு வணங்கப்படக்கூடிய நீதிபதிகளும் இருக்கின்றார்கள் எனவும் அவ்வாறான ஓருவரை அண்மையில் வடக்கில் தாம் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.