குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆளும் கட்சியின் பலர் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், கூட்டு எதிர்க்கட்சியில் விரைவில் இணைந்து கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இடைக்கிடை கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர் எனவும் இதனால் ஆளும் கட்சியிலிருந்து கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வோரின் மொத்த எண்ணிக்கை பற்றிய துல்லியமான விபரங்களை வெளியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இணைந்து கொள்ள உள்ளவர்களின் பெயர்களை முன்கூட்டி வெளியிட்டால் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்களின் வருகை தடுக்கப்படலாம் என மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment