சி.பி.ஐ செய்தித்தொடர்பாளர்:-
அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் மீது இரண்டு பாலியல் பலாத்கார வழக்கு என்பதால் தலா 10 ஆண்டுகள் என மொத்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது கடந்த 2002-ம் ஆண்டு பாலியல் பலாத்காரமுறைப்பாடு செய்யப்பட்டது. ஆசிரமத்தில் உள்ள பெண்கள் 2 பேரை இவர் வன்புணர்ந்ததாக குற்றச்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கு ரோத்தக் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 14 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பை வெளியிட்ட நீதிமன்றம், குர்மீத் ராம்ரகீம் சிங்கை குற்றவாளி என்று அறிவித்தது. அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.
சிறைக்குள் சி.பி.ஐ. நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை விபரங்களை அறிவிப்பதற்காக நீதிபதி ஜெகதீப் சிங்கை குர்மீத் அடைக்கப்பட்டுள்ள சுனரியா சிறைக்கு ஹெலிகாப்டரில் பொலீசார் அழைத்துச் சென்றனர். மதியம் 2.30 மணிக்கு தீர்ப்புக்கான இரு தரப்பு வாதப்-பிரதிவாதம் தொடங்கியது.
இதனையடுத்து, இறுதி வாதங்கள் நிறைவடைந்ததும் நீதிபதி ஜெகதீப் சிங் தீர்ப்பு விபரங்களை வாசித்தார். பாலியல் வன்புணர்வுக் குற்றத்திற்காக சாமியார் குர்மீத் ராம் ரகீம்க்கு தலா 10 ஆண்டுகள் என மொத்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
சிறை தண்டனை உடன் தலா 15 லட்சம் என மொத்தம் 30 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா 14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என முதலில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், தற்போது இரண்டு 10 ஆண்டுகள் தண்டனையையும் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என தீர்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும், இதை சி.பி.ஐ செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு விபரங்களை முழுவதுமாக படித்து முடித்த பின்னர், தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்படும் என சாமியார் தரப்பில் வாதாடிய வக்கீல்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
அரியானா மாநிலத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம்சிங். இவர் தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டு வட மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார். பல நாடுகளில் இவருக்கு சுமார் 300 ஆசிரமங்கள் உள்ளன. பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கு இவர் அதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதையடுத்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பை கேட்டு தரையில் அமர்ந்த ராம் ரஹிமை மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினர் இழுத்துச் சென்றதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
சாமியார் குர்மீத் ராம் சிங்குக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படவுள்ள நிலையில் கலவரக்காரர்களை கண்டதும் சுடுமாறு உத்தரவு
Aug 28, 2017 @ 04:33
பாலியல் வழக்கில் தேரா சச்சா அமைப்பின் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படும் நிலையில் ஹரியானாவின் ரோத்தக் மாவட்டத்தில் கலவரக்காரர்களை கண்டதும் சுடுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
குர்மீத் ராம் ரஹிம் சிங்குக்கு அளிக்கப்பட இருக்கும் தண்டனை விவரம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியால் இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. குர்மீத் ராம் ரஹிம் சிங் ரோத்தக் அருகே சுனாரியாவில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தீர்ப்பு வெளியானதும் ஏற்பட்ட கலவரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கவனத்தில் கொண்டு, தண்டனை விவரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிறைக்கு நேரில் சென்று அறிவிப்பார் என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் சிறையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன.
சிறைச்சாலை அமைந்துள்ள பகுதி உள்பட ரோத்தக் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சிறை செல்லும் வீதி நெடுகிலும் தடுப்பு அரண்களை அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ரோத்தக் மாவட்ட தேரா சச்சா சவுதா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரையும் முன்னெச்சரிகை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் வைத்துள்ள காவல்துறையினர் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இணையதளம் மூலம் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்கு, இணையதளச் சேவைகள் முடக்கியுள்ளனர்.
தீர்பினை வழங்குவதற்காக நீதிபதி ஹெலிகொப்படரில் சிறை;சசாலைக்கு செல்வதாகவும் இருதரப்பு வாதங்களையும் கேட்டதன் பின் தீர்பிபனை வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது