பாலியல் வழக்கில் தேரா சச்சா அமைப்பின் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கு சிபிஐ நீதிமன்றம் 10 வருட சிறை தண்டனை வழங்கியுள்ளதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஹரியானா மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாலியல் வழக்கு தொடர்பில் கடந்த 25ம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இன்றையதினம் 31 பேர் கொல்லப்பட்டதுடன் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இந்த நிலையில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள் 2 கார்களுக்குத் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தாலும் பதற்றம் அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.