175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டாக இணைந்து பாதுகாப்பு தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கபில வித்தியாரட்ன தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பாதுகாப்பு தந்திரோபாயங்களை வகுப்பது பொருத்தமானதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று ஆரம்பமாகிய பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் வன்முறைச் சம்பவங்களில் பல்வகைத்தன்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்வு கூற முடியாத அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love